அத்தை

தாயினும் மேலான உறவென்று உறவு உண்டென்றால் அத்தையென்னும் உறவை காட்டிடுவேன்
இனியும் இந்த அன்பு எங்கு கிடைக்கும்.
உறவுகளில் சிறந்த உறவு அத்தையென்னும் உறவாகிடுமோ. சின்ன சின்ன திட்டு வாங்குவேன் கண்டால் பயந்தும் கொள்வேன் ஆனால் அதில் மறைந்திருந்த உண்மையான அன்பை காணமறந்தேனே. என் எண்ணோட்டத்தை விரைவில் புரிபவளும் அவள் தானே.
சிறு வெற்றி பெற்றால் பாராட்டியதில்லை .
ஆனால் தோல்வி கண்டால் என்னை தேற்ற தவறியதில்லை.
தன் மகளே வந்தாலும் எனை கவனிக்க தவறியதில்லை.
என்னை ஒவ்வொரு நாளும் நினைக்கும் உறவும் அவள் தானே
எந்தன் தீமைகளை களைத்து என்னை செதுக்கும் என் அத்தையின் அன்பை கண்டு மெய் சிலிர்த்தேனே
என் தாய்மாமனின் மனைவியே
உதிர பந்தம் எதுவும் நமக்கில்லை . ஆனால் இந்த அன்பு உதிர பந்தத்திலும் மேலானதே
என் அத்தையே
என்னவென்று சொல்வதோ உன் அன்பினை

எழுதியவர் : பிரகதி (2-May-18, 8:37 pm)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : atthai
பார்வை : 6959

மேலே