சாதி மதம்

“நீங்க என்ன ஆளுங்க,

சும்மா தெரிஞ்சுக்கிறேன்”

என்று கேட்கிறார் நண்பனின் அம்மா

சோறு போடும் முன்,

பல மதத்தைச் சேர்ந்த மாணவர்கள்

படிக்கும் ஒரு கல்லூரியில்

தினமும் காலையில் கிறிஸ்தவ பிரார்த்தனை,

காரணம் கிறிஸ்தவ கல்லூரியாம் !

இந்துக் கல்லூரிகளிலும் இப்படித்தான்,

காதல் சொல்ல சென்றேன்

“எங்க வீட்ல கேஸ்ட் பாப்பாங்க” என்றாள்,

கீழ் சாதி என்று

தன் மகள் காதலித்தவனை

வெட்ட ஆள் அனுப்புகிறார் அப்பா,

சாதியை வைத்து மேன்சன் நடத்துகிறது

ஒரு கூட்டம்,

தலித்து மக்களுக்கு இன்றும் ப்ளாஸ்டிக் டம்ளரில்

தேநீர் தருகிறது ஒரு கூட்டம்,

இறந்த பின் நம்மை யாரும்

பெயர் சொல்லி அழைப்பதில்லை

“சவம்” என்றே அழைப்பர்

இதனை உணர்வதே இல்லை

“த்தா…சாதி மதத்த வெச்சு

என்ன அப்படி அனுபவிச்சிட்டீங்க"

என்று கூறி உரையை முடித்துக் கொள்கிறேன்

எழுதியவர் : நா.கோபால் (3-May-18, 2:04 pm)
சேர்த்தது : நா கோபால்
Tanglish : saathi matham
பார்வை : 42

மேலே