கிளியும் பிணந்தின்னி கழுகும் சிறு காதல்

ஆண்:- நெஞ்சினுள்ளே கிளி கொத்தும் ஓசை, டொக் டொக் டொக் டொக்,
மனம் மரமானது ஏனோ?

சொல்வாயோ நெஞ்சினுள்ளே?
மறக்க முடியாத மரமாக நீ வளர என் மனம் மரத்துப் போனதடி..
டொக் டொக் டொக் டொக்,
மீண்டும் ஓசை கேட்குதடி...

நெஞ்சினுள்ளே பாசம் வைச்சேன்,
நாளும் உன் மேல அன்பு தானே வளருது புள்ள,
டொக் டொக் டொக் டொக் கிளி கொத்தும் ஓசை மீண்டும் நெஞ்சினுள்ளே,

அசையாத அரசமரமா?
விழுதுகள் ஊன்றிய ஆலமரமா?
தெரியும் முன்னே!
பச்சைக் கிளி கொத்தும் ஓசை கேட்குதடி நெஞ்சினுள்ள,

இன்னும் என்ன சொல்ல?
என் நெஞ்சினுள்ள
கிளி கொத்தும் ஓசை டொக் டொக் டொக் டொக் என்றே கேட்குதடி.

வெளியே சொல்லவும் பயம்,
அப்படி சொன்னாலும் நீ விளம்பரம் என்பாயே,
என்ன சொல்ல,
நீ என் நெஞ்சினுள்ளே வாழும் கொத்தும் கிளியடி,
மரமாய் என் மனதை கொத்துவது ஏனடி?

பெண்:- சொல்லுவாயா டா?
சொல்லாத என் சோகம் நீ அறிவாயோ டா?
பிணந்தின்னிக் கழுகாய் என் மனசைக் கொத்திக் கொத்தித் தின்கிறாயடா?

நீ பண்ணும் சேட்டையெல்லாம் நெஞ்சினுள்ளே,
வேறெங்கே நான் சொல்ல?
என் நெஞ்சினுள்ளே ஆக்கிரமித்த பிணந்தின்னக் கழுகாய் என் பாசம் அறியாது மனதை உண்கிறாயேடா,
தின்னது போதும்.
சற்றே விலகிச் செல்லடா...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-May-18, 3:17 pm)
பார்வை : 887

மேலே