தோழி

என்ன தவம் நன் செய்தேனோ நீ எனக்கு தோழியாய் கிடைத்ததற்கு
எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும் நீயே எனக்கு தோழியாய் வர வேண்டும் கண்மனியே
கல்லூரி நாட்களில் எல்லாம் உன் கரம் பிடித்தே நடந்த நான்
இன்று தனியாக நான் நடக்க தடுமாறி விழுகிறேன்
வகுப்பறைகளில் எல்லாம் உன் அருகிலேயே அமர்ந்திருந்த நான்
இன்று யாருமில்லததால் அனாதையாய் அகத்திலே அழுகிறேன்
நாம் படித்த நாட்களெல்லாம் முடிந்த பொழுதிலும்
நம் நினைவுகள் என்றும் அழியாது கண்ணே
பிரிவு வந்து நம்மை பிரித்தபொழுதிலும்
வாய்ப்பு வரும் பொழுது நீ பேசும் ஒரு வார்த்தை போதும் பெண்ணே
தோழியே நீ கொடுத்த பிறந்தநாள் பரிசுபோல
என் பெற்றோரும் இதுவரை தந்ததேஇல்லையே
விளையாட்டாக நீ கொடுத்த ஒரு கல் போதுமே
அதை நான் வைரமாய் நினைத்து வாழ்நாள்யெல்லாம் வைத்திருப்பேனே
பொக்கிஷமாய் நீ அளித்த புடவை மட்டுமே
நான் கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பட்டு புடவைக்கும் அது ஈடாகாது என்னவளே
முதன் முதலில் மூன்றே நிமிடம் நான் உன்னை பார்த்ததும்
ஏனோ முப்பதுஜெமமை நாம் பழகியதுபோல் எனக்கு தோன்றவைத்தவளே
நான் தோல்வியுறும் பொழுதெல்லாம்
தோழியாய் எனக்கு தோல்கொடுத்தவேளே
நான் கதைகளில் கேட்ட கர்ணன் - இன்று
பெண்ருவில் வந்து உயர்நட்பையளித்த உயிர்த்தோழியே
உன் போல் சினேகிதியை நான் அடைய
என்ன புண்ணீயம் செய்தேனோ முற்காலத்தில்
இனி வரும் பிறவி எல்லாம் தோழியே
உன் காலனியாக பிறந்து நான் உன்னை
கடைசி வரை சுமக்க வேண்டும் என் கண்மனியே !!!