முதுமொழிக் காஞ்சி 61

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரறிவி னோனினிது வாழாமை பொய். 1

- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், ஒருவன் பேரறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்.

பதவுரை:

ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் - மனிதர் எல்லாருள்ளும், பேர் அறிவினோன் - மிக்க அறிவுள்ளவன்,

இனிது வாழாமை - இன்பமடைந்து வாழாதிருத்தல், பொய் - பொய்யாம்.

மிக்க அறிவுள்ளவன் இனிது வாழ்வான் என்பது உண்மை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-May-18, 11:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே