தேரா மன்னன் நானோ

தேரா மன்னனாய் நானும்
தீரா பழியுடன் தானோ
உன்னை
காணாதுயிர் விடுவேனோ

ஊணோடு உயிரிருந்தும்
தேனில்லா மலராய் தானே
மணமில்லா வாழ்க்கையை
ரணமோடு கழிக்கின்றேன்

இது விதி
செய்த முடிவோ
இல்லை வினை
செய்த விளைவோ
எதுவென்று அறிய
துணிவில்லை எனக்கு

மணப்பந்தல் அதனில்
உனக்கினை நானாய்
உன்கழுத்தில் நாணை
நான் ஏற்ற
நீ நாணும்
அழகை காண
மனப்பந்தல் கொண்டேன்

வேறுருவர் உனக்கிட்ட
திலகம் என்நெஞ்சை
சுட்டெரிக்க கண்டால்
வானளந்த பெருமானும்
நாவறண்டு அழுவான்
நானிழந்த நிலையெண்ணி

எனது கிறுக்கல்கள் 65✍️

எழுதியவர் : துளசிதரன் (8-May-18, 11:36 pm)
சேர்த்தது : துளசிதரன்
பார்வை : 73

மேலே