உனக்காக இறப்பதும் உன்னால் இறப்பதும் வரம்

அம்மா
நீ சரண்டர் ஆகறீயா இல்ல செத்து போறீயா?

செத்து போறேன்பா.

பேனாவை எடுத்து
சதக் சதக் சதக் என்று வயிற்றில் குத்தினான் மகன்.

ஆ ஆ ஆ அம்மா மாமா
நான் சாவது போல் நடித்தேன்.

முனகல் சத்தம் அடங்கி
வயிற்றில் இருந்த கை கீழே சரிய
தலை ஒரு புறமாக சாய்ந்தது.

நான் செத்துட்டன்.

அம்மா அம்மா அம்மா
உடனே அவனை கட்டிபிடித்து சிரிக்கிறேன்.
இருவரும் கட்டிபிடித்து அரவணைத்து சிரிக்கிறோம்

ஆமாம் நீ போலீஸ் தானே.
துப்பாக்கியால தானே சுடணும்.

யார் சொன்னா?
நான் திருடன்

ஹா ஹா

துப்பாக்கி குண்டுகள் நெஞ்சை துளைக்க
அவர் மடியில் விழுந்தேன்

மாமா உங்களுக்கு ஒன்னும் ஆகலையே
என்று மார்பை தடவி பார்க்கிறேன்.

எனக்கு ஒன்னுமில்ல.
நீ ஏனடி குறுக்குல வந்த.

என் மாமாவ
நான் உயிரோடு இருக்க வரைக்கும் சாக விட்ருவேனா?

மாமா மாமா ஆ ஆ மாமா

அவர் மடியில்
என் உயிர் அடங்கியது

மூன்று பேரும் சிரித்துக் கொண்டோம்.
அவர் திருடனாம்.
மகன் போலீஸாம்.

உன் கையால் இறப்பதும்
உனக்காக இறப்பதும் வரம் எனக்கு

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-May-18, 7:59 am)
பார்வை : 599

மேலே