பெண்கள் படிக்க வேண்டாம்

உன் ஓடையில்
கலைகிறது என் கவனம்.
காற்றின் படுக்கையில்
அந்த மைதூனம்.
உயிரில் மயக்கம் பரவ
இலை தவறி விழுந்த எறும்பாய்
தரையெங்கும் என் ஓடை.
என்னை நானே கொன்று
உயிர் மீட்க இதுவன்றி
வேறொன்று உண்டா?
சாய்ந்த உடலுடன்
விழிக்கவியலாது மோதுகின்றன
அந்தக் கோபத்தில்
வெடித்த அழுகை.
புறங்கை உதறியதும்
இன்னும் சிந்தின
வழியாது நின்ற சொட்டுகள்...
சொட்டும் மழைத்துளியில்
தோள் உரசி தீப்பட்ட
நினைவுகளில் கொதித்தது
திசையின்றி அலைந்த பீஜம்.
குறி வைத்து பொய்த்த வாள்
தவறாது அறுத்தது
கனவின் சினைப்பைதனை...
விடியலில் வரும் உறக்கம்
கருக்கிப்போனது பூபாளங்களை.
சாவை கொல்லும் மைதூனம்.

எழுதியவர் : ஸ்பரிசன் (10-May-18, 4:20 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 95

மேலே