நீயே என் மிகச் சிறந்த பரிசு
மனைவிக்கு !
அன்பே !
உன்னிடம் நான்
சொல்லியிருக்கிறேனா !
என் வாழ்வு சிறக்க நீ
எவ்வளவு அவசியம் என்று;
உன்னிடம் நான்
சொல்லியிருக்கிறேனா !
என் வாழ்வில் நீ இருப்பதால் இன்பம்
எவ்வளவு பெருகியது என்று;
உன்னிடம் நான்
சொல்லியிருக்கிறேனா !
என் இல்லறத்தில் ஒளி வீசும்
நீயே என் உலகமென்று;
உன்னிடம் நான்
சொல்கிறேன் இப்பொழுது,
தெரிந்து கொள்;
நான் பெற்ற அனைத்திலும்
நீயே என் மிகச் சிறந்த பரிசு,
நான் உன்னை நேசிக்கிறேன்.