உன் பெயர்

பனிக்கட்டியால் பளிங்குபோல் வீடு அமைத்தேன்
அதில் மேகத்தை மெத்தையாய் விரித்தேன்
வானவில்லை வர்ணங்களாய் தீட்டினேன்
மயிலின் தோகையால் சேலையை வடிவமைத்தேன்
வின்மீன்களை உன் கூந்தலில் சூட பூக்களாக மாற்றினேன்
மின்னலை விளக்காக வீதியெங்கும் ஏற்றி வைத்தேன் - அதில்
வெண்ணிலவே வெளீச்சமாக நீ வந்தாய்
உன் ஒளியால் என் இல்லமெங்கும் இன்பத்தால் ஜொலிக்கவைத்தாய்
ஆனால் தீடீரென என்னை மறந்துவிடுயென கூறி
என் மனதில் இடியாய் இடித்தது ஏன் அன்பே
நீ இடி போல் இடித்ததால் நான் மழையாய் அழுதுவிட்டேன்
நீ என்னை மறந்துவிட்டு பறவையாய் பறந்து போனதால்
நான் விண்கற்களாய் எரிந்து விழுந்துவிட்டேன் பெண்ணே
கீழே பார்த்தால் எரிந்த சாம்பலில் காற்று எழுதியது உன் பெயரை!!!

எழுதியவர் : M Chermalatha (11-May-18, 3:49 pm)
Tanglish : un peyar
பார்வை : 482

மேலே