யுகக் காதல்

அர்த்தம் புரிந்து வருவதில்லை காதல்
செவ்வானம் கவியும் போதும்
சித்தம் மயங்கும் போதும்
மனதில் விரியும் ஒரு விநோதப் புத்தகம் காதல் !

சத்திய யுகத்தில் இது இல்லை
திரேதா யுகத்தில் அண்ணலும் அவளும் நோக்கியது காதல்
துவாபர யுகத்தில் கண்ணனும் ராதையும் புரிந்தது காதல்
கலியுகத்தில் அண்ணல்களும் அவள்களும்
அர்த்தம் புரிந்தும் புரியாதும் புரிவது காதல் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-May-18, 9:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே