தாய்
இருட்டு அறையில்
இதய துடிப்பில்
இன்பமாய் உறங்கினேன்
இனி நினைத்தாலும் கிடைக்குமோ
கருவறையின் தாலாட்டு
மாதவிடாய் காலத்திலும்
மாதந்தோறும் அவஸ்தாயிலும்
என்னை மறவா தாயுமானால்
கண்ணிமைக்கும் நொடியிலும்
கண் இமைக்காமல் காத்திடுவாள்
குளிர் காத்து என்னை மோதினால்
சிறை பிடித்து வைத்துடுவாள்
என் புன்னகை கண்டு
தன் வலி மறந்திடுவாள்
அவளே என் தாய் ...