அம்மா எந்தன் தேவதையே

அம்மா……….
மூன்றெழுத்து வார்த்தையதை செவிமடுப்பின்
தேன் ஊற்று சிந்தையிலே, மகிழ்ச்சி பொங்கும் மனதினிலே!
அம்மா எனும் சொல் மந்திரம் அதுவே என்றும் சத்தியம்,
அன்னை போன்ற செல்வம் வேறெங்கும் இல்லை
அவளின்றி உலகில் இன்பம் ஏதுமில்லை.

வெயிலில் நமக்கு நிழல் ஆவாள்,
மழையினில் நல்குடையாவாள்
நம் பசி தீர்க்கும் தெய்வம் ஆவாள்
தோல்வியில் ஊக்கம் தரும் மருந்தாவாள்
விழுந்தாலும் எழ வைக்கும் கொடியாவாள்

பசித்தாலும் அம்மா, வலித்தாலும் அம்மா,
கவலையிலும் அம்மா, வெற்றியிலும் அம்மா.
அம்மா என்றிட உயிரினம் உய்த்திடும்
அம்மா என்றிடில் அன்பும் கரை புரண்டோடும்!
அம்மா என்றிடில் துன்பமும் விலகியோடும்

திங்கள் பத்து கருவினில் என்னை சுமந்தவளே
இரவு பகல் பாராது எனது நலம் பேணியவளே
உன் புகழ் பாட வார்த்தைகள் தேடி நின்றேன்.
நன்கறிந்துகொன்டேன் நான் இன்று
பிறவி பல எடுத்தாலும் போறாது நின் புகழ் பாட.

பிரம்மன் படைத்த தேவதையே எந்தன் அம்மா
அகிலம் போற்றும் அன்னையர் தின இந்நன்னாளில்
ஒன்று மட்டும் கூறிடுவேன் என் அருமை அம்மா
அடுத்த பிறவி என ஒன்றிருப்பின் அன்பினுருவே
உன்னை சுமப்பேன் எந்தன் கருவினிலே!

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (13-May-18, 8:05 pm)
பார்வை : 68

மேலே