உன் அருகில் நான்

என் அருகே நீ இருந்தால்
இந்த உலகத்தில் எவையும்
வெல்வேன்....
என் அருகே நீ இருந்தால்
என் இமைகள் மூடா
உன்னை காப்பேன்..
என் அருகே நீ இருந்தால்
என் வாழ்க்கை முழுவதும்
நான் இன்பமாய் இருப்பேன்...

என்னவளே....
என் உயிர் கொண்டவளே
என் ஆசைகளின் அர்த்தங்கள் நீயே
என் மௌனத்தின் மொழியே
என் பொக்கிஷமே ....
உன் கைகள் பிடித்து எவர் எதிர்த்தாலும்
உன்னை பிரியமாடேனடி........
உன்னை விட்டு விட மாட்டேனடி.......

எழுதியவர் : உமா மணி படைப்பு (14-May-18, 11:18 pm)
சேர்த்தது : உமா
Tanglish : un ARUGIL naan
பார்வை : 420

மேலே