அம்மா கீர்த்தனைகள் தொடர்ச்சி

7/ இராகம்: ஹம்சத்வனி தாளம்: ஆதி
பல்லவி
கைத்தொழவே எதுவும் கைகூடும் அன்னையை அன்புடன்
பேணிடும் தாயவளை (கைத்)
அநு பல்லவி
செய்தொழில் சிறப்புற சிந்தை தெளிவுபெற
செய்திடும் தாயவளின் திருமலரடி நினைத்து (கைத்தொழ)
சரணம்
அன்னையை நினைத்து ஆரம்பமாகும்
அத்தனைக் காரியம் அநுகூலமாகும்
ஐயமில்லை வெற்றி நம்வசமாகும்
ஆயிரம் ஆயிரம் நன்மை உண்டாகும் (கைத்தொழவே)

8/ இராகம்: ஸ்ரீ ரஞ்சனி தாளம்: ஆதி
(ராக மாலிகை)
பல்லவி
முத்தமிழ் வித்தகி எந்தன் தாயே
சித்தம் இரங்காயோ அம்மா... அம்மா... அம்மா... (முத்தமிழ்)
அநு பல்லவி
நித்ய கல்யாணியே நிர்மல ரூபியே சத்ய ஸ்வரூபிணியே....
மெத்தவே உன்னைப் போற்றினேன் மேன்மை அருள்வாய்
மகிமைமிகும் என் அன்னையே.. அம்மா(முத்தமிழ்)
சரணங்கள்
(மத்தியம காலம்)
பாதம் பணிந்திடும் அன்பரைக் காத்தருள்

எந்தன் அன்னையே சரணம் சரணம்
பணிவுடன் போற்றினேன் பாடலைக் கேட்டருள்
பைங்கொடி பதமலர் சரணம் சரணம்

சத்துவ குணங்கள் யாவும் கொண்ட
சாந்த ஸ்வரூபியே சரணம் சரணம்
சங்கடம் போக்கியே எங்களைக் காத்தருள்
எங்கள் அன்னையே சரணம் சரணம் (முத்தமிழ்)

வருவாய் நீயே.. காத்தருள் வாய்
மலர்ப்பாதம் போற்றி பணிந்திடுவோம்
சரணார விந்தங்கள் பணிந்தோம் அம்மா
சஞ்சலம் போக்கியே காக்கும் தாயே
ராக தாளம் இட்டு பாடினோம் உன்னைப் போற்றினோம்
ப்ரஸீதப் ப்ரஸீதப்
ப்ரஸீதப் ப்ரஸீதப்
ப்ரிய தெய்வமே மாதேஸ்வரி
மனமாற உனைப் பாடி மகிழ்வேன் தாயே
ஆனந்தம் கொண்டே வந்தருள்வாய்




அடைக்கலம் உன் மலர் பாதம் என்றும்
அம்மா நீயே வந்தருள்வாய்
எமைக்காத்து அருள் செய்ய விரைந்தே இங்கு(முத்தமிழ்)

எழுதியவர் : ஸ்ரீ vijayalakshmi (15-May-18, 4:53 pm)
பார்வை : 132

மேலே