பேசும் காதல் சித்திரம்

செங்காந்தள் மகரந்தம் காற்றினில் தூவி
நின் வதனம் சேர்த்ததோ!
நாணமென்னும் பூவும் மலர்ந்து
எழிலூரும் நதியானதோ!
விண்ணிலிருந்து புறப்பட்ட இருவிண் மீன்கள்
நின் விழியானதோ!
தென்றலோடு பண்ணிசைக்கும் நாதங்கள்
நின் கார்குழலானதோ!
செந்தமிழ் பாக்களெல்லாம் தீஞ்சுவைக்கூட்ட
நின் அதரமானதோ!
திங்களின் பருவத்தில் வார்த்தெடுத்த ஈர்நிலை
நின் செவியானதோ!
நதியினோடையிலே சலசலத்த நீள்பாதை
நின் மெய்கொடியானதோ!
அன்னலும் மின்னலும் கூடியே
நின் நடையானதோ!
மொத்தத்தில் காதல் மொழி பேசிடும்
கலை சித்திரமானதே!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (15-May-18, 8:28 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 507

மேலே