உண்மைக்காதல் அழியாது

சலீம்-அனார்கலி போல்
அம்பிகாபதி-அமராவதி போல்
ஈருடல் ஓருயிராய்
காதல் வானம்பாடியாய்
திரிந்துவந்த இவர்கள்'
ஜாதி வெறி பருந்துகள்
கண்ணில் பட்டுவிட
விட்டுவைக்க வில்லை பருந்து
தாக்கி கொத்தி கொலையுசிராய்
தூக்கி எரிந்து போய்விட்டது
பாதையில் எறியப்பட்ட உடல்கள்
சிலர் பார்த்து ஆயின செய்து
அடக்கம் செய்து கல்லறையும்
எழுப்பினர் இவர்கள் நினைவாக

இதை அறிந்த அந்த வீணராம்
பருந்து கல்லறைக்கு விரைந்து
கல்லறையை உடைக்க
அதிலிருந்து வானிற்கு எழுந்த
ஆவிகளிரண்டு , பருந்திடம்
சொன்னதாம்'" எங்கள் காதல்
மாசிலா காதல், உண்மைக்காதல்,
அதற்கேது அழிவு,மீண்டும்
ஒரு ஜென்மம் இருப்பினும்
நாமிருவரும் காதலிப்போம்
உடலை நீ அளித்து என்ன
பயன், எங்கள் காதலை உன்னால்
தொடவும் முடியுமா " என்று
அசரீராய் சொல்லி மறைந்ததாம்
இப்படி ஒரு வாய்வழி காப்பியம்
இவர்களை பற்றி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-May-18, 6:26 am)
பார்வை : 216
மேலே