அவள்

குயிலோசையில் இசை இல்லை
மயில் ஆட்டத்தில் பாங்கில்லை
அன்ன நடையில் அழகில்லை
நிலவின் ஒளியில் குளிரில்லை
பூத்த மலரில் வாசம் ஏனோ இல்லை
அதோ அசைந்துவரும் தங்க ரதம்
அவள் அல்லவோ, குயில் இசையாய்ப் பேசி
மயிலாய் ஒய்யாரமாய் நின்று
அன்னம்போல் நடந்துவந்து
நிலவாய் முகம் பொலிய, எழிலாய்
மலராய் புன்னகைக்க , பாவம்
குயில்,மயில்,அன்னம்,நிலவு
இன்னும் மலரும் தம் குணம் இழந்து
அவளிடம் தஞ்சம் புகுந்திட
தங்கரதம் போல் ஜொலித்து வருகிறாள்
என்னவள் என் மனத்தைக் கவர்ந்தவள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-May-18, 10:07 am)
Tanglish : aval
பார்வை : 318

மேலே