நேருக்கு நேராய்

நேருக்கு நேராய் கண்டேன்
இன்று தான் அழகு பிறந்த நாளென உணர்ந்தேன்
மெல்லிய புன்னகையில் என்னைக் கொன்றுவிட்டாளே
இதுவரை பேசாமல் கொன்றாள்
இன்று அவள் விழி மீது என் பார்வையை உரசி நின்றாளே
தீண்டத்தகாதவன் என்றே நினைத்தாலே அன்று
இன்றோ நாணம் கொண்ட நிலவாக தேய பார்க்கிறாளே
என்னதான் பெண்ணின் மனம் நினைக்குமோ ?

எழுதியவர் : கவிராஜா (16-May-18, 9:56 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
Tanglish : nerukku neraai
பார்வை : 423
மேலே