சுடுவதோ நட்பு

அவன் சொல்லும் அனைத்தும்
பொய் என்று தெரிந்தும்
ஏனென்று கேட்காமல்
அப்படியே நம்புவதா நட்பு?

அவனுக்கு உண்மையின் வலிமையை
அறியுருத்துவது அன்றோ நட்பு!!!

அவன் மற்றவனைப் பற்றியே
பேசும் போது
அவனுடன் சேர்ந்து
நானும் பேசுவதா நட்பு?

அடுத்தவர்களைப் பற்றி
பேசுவது தவறென்று கூறி
அவனைத் திருத்துவது அன்றோ நட்பு!!!

அவன் கோபமாய்ப்
பேசுகிறான் என்றால்
நானும் அவனுடன் சேர்ந்து
கோபப் படுவதா நட்பு?

அவன் கோபத்தை
என் இனிமையான பேச்சின் மூலம்
குறைப்பதன்றோ நட்பு!!!

எழுதியவர் : இனியபாரதி (16-May-18, 10:15 pm)
பார்வை : 257
மேலே