உடல் தொடாத காதல்

உடல் தொடாமல்
காதலிக்க
நம்மால் மட்டுமே
முடியும்...
இரயில் தண்டவாள
இணைகளாகக்
கிடக்கும் நம்மை
எங்கோ சிலவிடங்களில்
தொடர் வண்டிபோல
நம்மைத் தழுவிக் கொண்டிருக்கின்றது
காதல் !

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (16-May-18, 11:11 pm)
சேர்த்தது : RAJA A_724
பார்வை : 48
மேலே