435 கொடுந்துயர்க்கு அஞ்சல் மீன் குளிர்க்கு அஞ்சுதலாம் – துன்பம் 1

கலி விருத்தம்

பாரில் யார்க்கும் பழங்கண் சகசமாம்
வீரி யங்கெட வெந்துயர்க் கஞ்சுதல்
போரி னேர்ந்தவன் பொன்றலுக் கஞ்சலும்
நீரின் மீன்குளிர்க் கஞ்சலும் நேருமே. 1

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உலகில் எவருக்கும் துன்பம் உண்டாவது இயல்பு ஆகும். ஆதலின் கொடிய துன்பத்திற்கு அஞ்சுவது போருக்குச் சென்றவன் ஆண்மையின்றி இறப்பிற்கு அஞ்சுவதும், நீரில் வாழ வேண்டிய மீன்கள் குளிருக்கு அஞ்சுவதும் போலாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பழங்கண் - துன்பம். சகசம் - இயல்பு. வீரியம் - ஆண்மை. பொன்றல் - மாளுதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-18, 8:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே