436 இறக்கும் வரை உள்ள துன்பம் எண்ணி சேய் அழும் – துன்பம் 2

கலி விருத்தம்

பிறந்த சேயுட னேயழும் பீழைதான்
சிறந்த மாநிலஞ் சேர்ந்துபின் னாருயிர்
இறந்து போமள வுந்துய ரென்பதை
அறிந்து நீர்விட் டனுங்கலை யொக்குமே. 2

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தாய் வயிற்றினின்று பிறந்தவுடனே குழந்தை வீறிட்டு அழும் துன்பமானது, உயர்ந்த பெரிய உலகில் சேர்ந்தது முதல் அருமையான உயிர் இறந்து போகும் வரை துன்பமே என்பதை அறிந்து, கண்ணீர் விட்டு துன்பப்படுவதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பீழை - துன்பம். அனுங்கல் - துன்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-18, 8:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே