யுகங்களை முத்தத்தில் அடைப்போம்

மௌனங்களால் பேசுவதால்
வார்த்தைகள்
மறந்துவிட்டன

புன்னகையால் அர்ச்சிப்பதால்
பூக்கள்
பொறாமை கொள்கின்றன

இதயங்களிடையே
இழையோடும் அன்பு
கடத்தியில்லா
மின்சாரமாகின்றது

வா
யுகங்களை சுருக்கி
ஒரு
முத்தத்தில் அடைப்போம் !

எழுதியவர் : Mathibalan (17-May-18, 9:22 am)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 253

மேலே