162 பரத்தையர் பெருநஞ்சு பாம்பினும் கொடியது –– பரத்தமை 6

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

உண்டவர் தமைக்கொலும் ஓத வெவ்விடம்
அண்டினோர் தமைக்கொலு(ம்) ஆளி கையினால்
தண்டினோர் தமைக்கொலுஞ் சற்பந் தையலார்
கண்டவர் நினைப்பவர் தமைக்கொல் காலமே. 6

– பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கடலில் எழுந்த கொடிய நஞ்சு உட்கொண்டவரைக் கொல்லும். சிங்கம் தன்னை நெருங்கினவரை கையால் அடித்துக் கொல்லும். பாம்பு கையால் தொட்டவரைக் கொல்லும்.

தீய பெண்கள் தங்களைப் பார்ப்பவர்களையும் நினைப்பவர்களையும் ஆலகால நஞ்சுபோல் கொல்வர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

ஓதம் - கடல். அண்டல் - நெருங்கல்.
ஆளி - அரிமா,சிங்கம். தண்டல் - தொடுதல்.
காலம் - நஞ்சு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-18, 1:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே