163 சிற்றின்ப ஆசையால் செய்பாவம் வீட்டில் தீயிடலாம் – பரத்தமை 7

கலி விருத்தம்

நிலையில்சிற் றின்பத்தின் நேயத் தால்தினம்
அலைவுசெய் பவந்தனை ஆற்றல் கொள்ளியால்
தலையினைச் சொறிதலுந் தகிக்குந் தீயினை
எலியினுக் கஞ்சியில் லிடலும் எய்க்குமே. 7

– பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நிலையில்லாத சிற்றின்ப ஆசைக்காக நாள்தோறும் நிலைத்த துன்பம் தரக்கூடிய பாவத்தைச் செய்வது, தலையினைக் கொள்ளிக் கட்டையால் சொறிவதற்கும், எலிக்குப் பயந்து வெப்பம் மிகுந்த எரியும் தீயினால் வீட்டிடைக் கொளுத்துவதற்கும் ஒப்பானதாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அலைவு - துன்பம். தகித்தல் – வெப்பம் மிகுதல், சாம்பராக்குதல். இல் - வீடு. ஏய்க்கும் - ஒக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-18, 1:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51
மேலே