முதுமொழிக் காஞ்சி 65

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மேல்வர வறியாதோன் தற்காத்தல் பொய். 5

- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் எதிர்காலத்து வரும் இடையூறு அறியாதான் தனக்கு அரண்செய்து காத்தல் பொய்.

நல்ல காரியத்துக்கு நாலிடையூறும் வரும்: அவைகளை முன்னாக அறிந்து பரிகாரம் தேடாதவன் தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்வது இல்லை.

'வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். 435 குற்றங் கடிதல்

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-18, 5:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே