பிறந்தநாள் கவிதை

அன்பு நண்பனுக்கு

நட்பின் இலக்கணமாய்
நானிலத்தில் பிறந்தவனே
எட்டி நடக்கையிலே
நண்பர்களாய் நாமிருந்தோம்

அன்பென்று நான்கேட்டால்
அளவின்றி தந்திடுவான்
வம்பென்று வந்துவிட்டால்
முன்னாலே நின்றிடுவான்

நினைவுதெரிந்த நாள்வரையில்
நண்பர்களாய் நாமிருந்தோம்
நினைவுள்ள நாள்வரையில்
நண்பர்களாய் நாமிருப்போம்

நட்புக்கு கர்ணன்நீ
நான்விரும்பும் ஒருவன்நீ
கல்லுக்குள் ஈரம்நீ
கரும்புக்குள் சாறும்நீயே

இன்றுஉனக்காய் எழுதுது
இவனின் எழுதுகோல்கள்
என்னுயீர் நண்பனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

எழுதியவர் : கவியரசு (17-May-18, 11:38 pm)
சேர்த்தது : KAVIYARASU
பார்வை : 253

மேலே