காதல் கீதம்

மஞ்சள் முகத்தாள்
கதிரவன் கிரணங்களின்
பரிசத்தால் விரிந்து புன்னகைக்கும்
சூரிய காந்தியாய்
அவன் புன்னகையில்
முகம் மலர்ந்து ,அவன்
முன்னே செல்ல செல்ல,
அவன் பின்னே கான குயிலாய்
சிருங்கார சுருதி எழுப்பி மெல்லிய
காதல் கீதம் பாடி அவன் உள்ளம்
குளிரச்சென்றாள் அன்னம்போல்
நடை நடந்து அவன் பின்னே
அந்த பாட்டின் மெல்லிசையில்
தன்னை மறந்தே முன் சென்றான்
அவனும், சட்டென்று அவள்
குரல் கேளாது பின் திரும்ப,
அவன் கரங்களில் அவள் தஞ்சம்
அவள் மஞ்சள் முகத்தில் அவனிட்ட
முத்தங்கள் ரத்தினங்களாய்
அவள் முகத்தில் வந்து இழைய
அவன் இறுகிய பிடியில் இப்போது
புதிய கீதம் ஒன்று உதயம்
காதல் கீதம் அதுவே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-May-18, 9:14 am)
Tanglish : kaadhal keetham
பார்வை : 80

மேலே