அரசியல்வாதியின்அவலம்

அரசியல்வதியின் அவலம்

அடிமையாகி போனோமே,
அடிமையாகி போனோமே,
சில்லறைக்காய் வாக்கை விற்று
இவர்களிடம் அடிமையாகி போனோமே !!!

நடுவில் வந்து ஆட்சி செய்வோம்,
உள்ளதொல்லாம் பகிர்ந்து கொள்வோம்,
ஏனோ நாட்டு நடப்பு புரியவில்லை,
ஆனா சாமியென கர்வம் கொள்வோம்!!!

தந்தை வழி வந்த மகன்,
கூட்டத்தோட சட்டமன்றம் போய்புட்டு,
சட்ட கிழிய வெளிய வந்து,
சவால் விட்டு செல்லுறாரு !!!

அதர பழைய ஆளு இவரு,
பொடிநடைய நடக்கறாரு,
மாறி மாறி பேசிப்புட்டு,
பணப்பையை நொப்புராரு !!!

கண்சிவக்க தள்ளாடி பேசுறாரு,
சூழ்சியாலே மாட்டிகிட்டு முழிக்கிறாரு,
ஊடகங்கள் உன்னை சித்தரிக்க,
நாகரிக ஜோக்கராகி போனிரே !!!

கொள்கை கொண்டு முழக்கமிட்டு,,
நாம்தமிழர் என உரிமைகோரினிரே,
தன்னை முன்னிருத்த கதைகள் சொல்ல,
கதைகலெல்லாம் பொய்த்துபோய் நிற்கிறிரே !!!

பல காலமாக வருகிறாரு,
போருக்காக காத்துக் கிடக்குறாரு,
கொள்கை என்னெவென கேட்டுபாரு,
தலைசுத்தி தரையில்வந்து விழுகிறாரு !!!


திடிரென மைய்யம் கொள்ள,
தித்திப்பாய் கட்சியொன்றை தொடங்கினாரு,
சப்தம்மின்றி மைய்யம் கொள்ள,
நூறுநாள் நிகழ்ச்சி மட்டும் நடத்துறாரு !!!

சின்னம்மா என வந்தவுங்க,
சிறைக்கு போங்க என சொல்லிட்டாங்க, ,,
இருபதுரூபாய் தாளை வைத்து
கூக்கர் சப்தாதோட சட்டமன்றம் ஏறுராரு !!!

கருப்பு பணம் ஒழிஞ்சு போச்சு,
ஊழல்லொம் ஒழிஞ்சு போச்சு,
என புழுகிப்புட்டு ஊர்மோயப் போகிறாரு,
எங்க ஊரு நாட்டாமை !!!

பல வருசம் ஆண்டுப்புட்டு,
நாட்டை நட்டாத்தில் விட்டுப்புட்டு,
இப்ப தலைவர் எங்கே என கேட்டேனே,
தயங்கி தயங்கி பப்புமாவை காட்டுறாங்க !!!

மாட்டிகிட்டோம் மாட்டிகிட்டோம்
நமெல்லாம் இவங்ககிட்ட மாட்டிகிட்டோம்,
என்ன அவலம் என்ன அவலம்,
எப்ப தீரும் இவுங்க அவலம் 🤔🤔🤔

குடிமகன்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (18-May-18, 12:23 pm)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 416
மேலே