நாம் உயிரின் மூலம் ,உணர்ச்சியின் அல்ல

கோபத்தில் எறிந்த
வார்த்தை அமிலங்கள்
விழுந்த இடத்தைவிட...
புறப்பட்ட இடத்தில்தான்
முதல் இரணத்தையும் ,
வலிகளின் வடுக்களையும்
விட்டுச்சென்றன.

ஒருபக்கம் மட்டும் கொண்ட
உருவென்று ஒன்றில்லை ,...
பிறப்பின் கொண்டாட்டம்
அதன் மறுபக்கம் மரணத்தை
மறுப்பதுபோல ,..
மறைந்திருக்கும் மறுபக்கம்
மறந்துபோயிருக்கும் பலருக்கு ...

ஓடி ,தேடி சேர்த்ததும்,
ஆடி ,படி களித்ததும்,
காலம் நமை திங்க.
நமையே நாம் திங்க அல்ல ..

உறவும் ,உணர்வும்
உயிரின் சேர்க்கையே...
ஒன்றிணைந்த உயிர்துளிகளில்
பெருகி பிரிந்த
சிறு துளிகள் நாம் ..
வானம் தெளித்த
பல மழைத்துளிகள்
சமுத்திரமாய் நாம் ஒற்றை
நீர்த்துளி.

பிண்டங்களாய் நாம்
பிரிந்து கிடந்தாலும்,
ஒற்றை அண்டமதின்
ஓருயிர்போல்.

எழுதியவர் : (18-May-18, 4:44 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 18
மேலே