நீயே என் இதயமடி 1

காலை நேரம் இருள் முழுவதுமாய்
விலகவில்லை கீழ் வானம் இளஞ்சிவப்பு
நிறத்தில் மேகங்கள் படர்ந்தும் படாமலும்
தெரிகிறது.சூரியனும் உறங்குபவர்களை
எழுப்பி கிளப்ப உதித்துக் கொண்டிருந்தான்.....

பறவைகளின் கீச் கீச் சப்தமும்....
அந்த காலையிலும் சாலையில்
செல்லும் ஒன்றிரண்டு வாகனங்களின்
இரைச்சல் உடன் ஆரம்பமாகிறது...
அந்த நாளின் பொழுது......

கோவில் நகரம், தூங்கா நகரம்,
என பல பெயர்களை கொண்ட
வீரத்திற்கும் பாசத்திற்கும் பெயர்
போன பெருநகரமான மதுரை
மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள
ஒரு தெருவில் அழகாய் காட்சியளிக்கிறது அந்த வீடு...

பார்ப்பதற்கு ரம்மியமாய் காட்சி அளிக்கிறது அந்த வீடு.....வீட்டின்
வாசலில் போடப்பட்டுள்ள மாவுக்
கோலமும் அதன் நடுவில் வைத்துள்ள
பூசணிப்பூவும் அந்த வீட்டின் அன்பையும்
பண்பாட்டையும் நமக்கு சொல்லுகிறது..


அந்த வீட்டின் கூடத்தில் போடப்பட்டுள்ள
சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் 50 வயதை நெருங்கும் அவர்தான் சதானந்தன் இந்த குடும்பத்தின் தலைவர் இவர் ஒரு
பிரைவேட் பேங்கில் வேலை செய்கிறார்


பேப்பரின் அடுத்த பக்கத்தை புரட்டுகையில் சமையரையில் இருந்து
ஒரு சத்தம்.......

என்னங்க இங்க வாங்க .....கேஸ் சிலிண்டர் தீர்ந்திருச்சு... வந்து வேற
சிலிண்டர மாத்தி விடுங்க....என்ற சத்தத்தின் சொந்தக்காரி 45 வயதை எட்டிய தேவி. இவர்தான் இந்த குடும்பத்தின் தலைவி..பெயர்க்கு ஏற்றார்
போல தெய்வ இலட்சணமாக உள்ளவர்...
தன் கணவர் மற்றும் பிள்ளைகளை சற்றியேதான் இவரது வாழ்க்கை.. தனது
குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் அக்மார்க் குடும்ப
பெண்.....

சதானந்தன் சிலிண்டரை மாற்றிவிட்டு மீண்டும் கூடத்திற்கு வந்து பேப்பரில் மூழ்கினார்...

தேவி காபியை போட்டு சமையலறையை விட்டு வெளியே வந்து தனது கணவருக்கு கொடுத்துவிட்டு தனது பிள்ளைகளை எழுப்ப சென்றாள்....

டேய் கார்த்திக் டேய் எந்திரிடா.....என தன் அம்மாவின் குரல் கேட்டு விழித்தான் .....
விழித்து தன் அம்மாவை பார்த்துவிட்டு

ம்ம்ம். .... இன்னும் ஒரு 5 நிமிஷம்மா...

டேய் எந்திரிடா... உனக்கு இதே வேலையா போச்சு என்று சொல்லி விட்டு தேவி சென்றுவிட்டாள்.....

ஆமாங்க இந்த கார்த்திக்-தான் நம்ம ஹீரோ....

டெய்லியும் அம்மா உசுப்பியவுடன்-தான் கண் விழிப்பான்.....

5 நிமிடம் கழித்து எழுந்து மணியை பார்த்தான் அது 6:30 என காட்டியது.அதை பார்த்துவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்து விட்டான்.. கார்த்திக் பிரெஷ் ஆகி வருவதற்குள் இவனை பற்றி பார்ப்போம்...

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ...இப்ப ஒரு ஆட்டோமொபைல் கம்பெனியில் டிசைன்
இன்ஜினிரா இருக்கான்....ரெண்டு வருசமா
இந்த கம்பெனியில வேலை பார்க்கிறான்...
இந்த வேலையோட இவர் பாக்குற காதல்
வேலைதான் இந்த கதைங்கோ....

கார்த்திக் பிரெஷ் ஆகி கூடத்திற்கு வந்தான் ...அங்கு வந்து தனது அப்பாவிற்கு
குட்மார்னிங் சொல்லிக்கொண்டே அவர்
பக்கத்தில் அமர்ந்தான்....

அவரும் குட்மார்னிங் பா என்று சொல்லி விட்டு காபியை குடித்துக் கொண்டே அந்த
பேப்பரை படித்து முடித்தார்....


அம்மா... காபி என்று சொல்லிக்கொண்டே தனது மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்....

அப்போது .. குட்மார்னிங்டா கார்த்திக் என்று சொல்லிக்கொண்டே அவனிடம் காபி கப்பை நீட்டினாள் அவனது அக்கா திவ்யா....

திவ்யாவிற்கு வயது 28 திருமணமாகி கணவண் சிவா வெளிநாட்டில் பணிபுரிவதால் இவள் தன் பெற்றோர்
வீட்டில் உள்ளாள்...இவளுக்கு நான்கு வயதில் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.தற்போது அந்த வீட்டின் இளவரசி கவிநயா....எல் கே ஜீ வகுப்பு படிக்கிறாள்....இதுதாங்க கார்த்திக்கோட அழகான குடும்பம்.

சரி வாங்க கதைக்கு போவோம்.....

ம்ம் .. குட்மார்னிங்-கா கவிய எங்க என்று கேட்டுக்கொண்டே காபியை வாங்கினான்..

ம்ம் அவ தூங்குராடா...இன்னும் எழுந்தரிக்கல...
ம்ம் சரி கா..நான் அவ எழுந்தோன பாத்துகிறேன்....என்று சொல்லிவிட்டு காபியை குடித்தான்....

அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர் அவர் வேலைகளை செய்யத் தொடங்கினர்.

கார்த்திக் தனது காலை கடமைகளை முடித்து விட்டு தனது வேலைக்குச் செல்ல
தயாராகி வந்தான்....

அம்மா நான் Office போயிட்டு வந்திடுறேன்.
என்று கார்த்திக் சொல்ல ..
ம்ம் பாத்து போயிட்டு வாடா ... என்று சமையலறையில் இருந்து வெளியே வந்து வழியனுப்பினாள் கார்த்திக் ன் அம்மா தேவி....

தனது அம்மாவிடம் சொல்லிக்கொண்டு தனது FZ பைக்கை கிளப்பி இரண்டு தெரு தள்ளி உள்ள பாலாவின் வீட்டின் முன் வந்து நின்றான்.....
( பாலாவும் கார்த்திக்கும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். பள்ளி, கல்லூரி, தற்போது வேலை செய்யயும் கம்பெனி வரை ஒன்றாகவே இருக்கிறார்கள்.......)

டேய் பாலா....என்று கார்த்திக் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே....
பாலா எதிரே வந்தான்...

டேய் வந்துட்டேண்டா கத்தாத...என்று சொல்லிக்கொண்டே ...பைக்கில் ஏறியமர்ந்தான்....பாலா..


-தொடரும்

எழுதியவர் : அருண்குமார் (18-May-18, 5:11 pm)
பார்வை : 274
மேலே