நீயே என் இதயமடி 2

கார்த்திக்கும் பாலாவும் இறங்கி ஆளுக்கொரு சிகரட்டை வாங்கி
புகைக்க ஆரம்பித்தனர்....

கார்த்திக் சிகரட்டை புகைத்துக் கொண்டே சாலையை நோக்கி காத்திருந்தான்....

பாலாவும் சிகரட்டை புகைத்துக்கொண்டே தனது மொபைலை நோண்ட ஆரம்பித்தான்...

கார்த்திக்ன் காத்திருப்புக்கு பலனாகவே அவனது தேவதை ...
பிரியா அவனுக்கு காட்சியளித்தால்......

பிரியா மிகவும் அழகானவள் ... சொக்க வைக்கும் பேரழிகி.....பார்ப்போரை ஈர்க்கும் கண்கள் .... அப்பப்பா..அவள் உண்மையில் தேவதைதான்....

( பிரியா - தாங்க நம்ம ஹீரோயின்.
இப்ப M com கடைசி வருஷம் படிக்கிறா..

பிரியாவோட அம்மா சத்யா கேரளப் பெண்மணி, அப்பா தயாநிதி பக்கா தமிழன் ...வேலை விசியமாக கேரளா சென்றபோது சத்யாவை பார்த்துப் பிடித்துப்போயி காதலித்து கரம் பிடித்தவர்கள்..சத்யாவின் வீட்டில்
எதிர்க்க தமிழ்நாடு வந்து வாழ்கின்றனர்......

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இந்த தம்பதியினரையும் வாழ வைத்தது.....

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் ...
மகன் குணா ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறான்
திருமணமாகி இரண்டு வருஷம் ஆகுது..
குணாவின் மனைவியின் பெயர் புவணேஷ்வரி .நல்ல குணமுடையவள் . புவனாவும் பிரியாவும் நல்ல தோழிகளாக பழகுபவர்கள்...
இதுதான் பிரியாவின் குடும்பம்...)

இப்ப நிகழ் காலத்துக்கு வருவோம்

கார்த்திக் சிகரட்டை புகைத்துக்கொண்டே..சாலையை நோக்கி காத்திருந்தான்....

அவன் காத்திருப்புக்கு பலனாகவே
அவன் தேவதை பிரியா காட்சியளித்தால்...

பிரியா அவசர அவசரமாக தனது கல்லூரிப் பேருந்தை பிடிக்க ..
கார்த்திக் நின்று கொண்டிருந்த டீ கடையை தாண்டிச் சென்றாள்...

கார்த்திக் சிகரட்டின் புகையை உள் இழுத்து அதை வெளியே விட மறந்து பிரியாவை பார்த்துக்கொண்டிருந்தான்...

பிரியா ஒடிச்சென்று பேருந்தில் ஏறி தனது தோழி சந்தியாவின் அருகில் அமர்ந்து கொண்டால்.

ஏண்டி மெதுவா வர வேண்டியதுதான..பஸ் தான் நிக்குதுல என்று சந்தியா கேட்க அதற்கு பதில் சொல்லாமல்...

எரும மாடு எப்படி பாக்குறான் பாரு.... திருட்டுபய...என்று முனு முனுத்துக் கொண்டிருந்தால் பிரியா...

யாரடி சொல்ர...என்று சந்தியா வினவ..?
வேற யார சொல்ல போரேன் ...ம் கார்த்திக்தான்.. என்று பிரியா சொன்னாள்......

பிரியா பேருந்து ஏறியவுடன் கார்த்திக் அருகில் வந்த பாலா...

என்னா மச்சி பிரியா பாக்காம போறா...என கேட்க

யார்டா சொன்னா அவ என்ன பாக்காம போறானு ... என்று முகத்தில் ஒரு புன்முறுவலுன் கேட்டுவிட்டு... அதுலாம் அவ என்ன பாத்துட்டுதான் போறா ...
நீ வண்டில ஏறு முதல என்று சொல்லிக்கொண்டே வண்டியில் ஏறியமர்ந்தான்...

இருவரும் தங்களது கம்பெனிக்கு வந்து அவர் அவர் கேபினுக்கு சென்றனர்..

கார்த்திக் அன்றய வேலையை பார்த்துவிட்டு .. தனது மொபைலை எடுத்து தனது காதலியின் புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தான்..
தனது காதலியை முகத்தில் ஒரு பிரகாச சிரிப்புடன் பார்த்துக்கொண்டே பழைய ஞாபகங்களில் மூழ்கினான்...

- தொடரும்

எழுதியவர் : அருண் குமார் (18-May-18, 5:18 pm)
சேர்த்தது : அருண் குமார்
பார்வை : 259
மேலே