438 பொருளிழப்பால் கீழோர் பொறாமல் மாள்வர் – துன்பம் 4

கலி விருத்தம்

பாக்கிய நிலையெனும் பதக ரோர்துயர்
தாக்கிடிற் பொறாதுயிர் தன்னைப் போக்குவர்
ஆக்கிய வாக்கமு மஞரு மொன்றென
நோக்கிய சீலரை நோயென் செய்யுமே. 4

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

“பொருட் செல்வம் நிலைத்து நிற்கும் என்று எண்ணும் அறிவில்லாத கீழோர் பொருட் கேட்டால் ஒரு துன்பம் தம்மைப் பாதித்தால், அத்துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொள்வர்.

தேடிய பொருளும், தாம் அடையும் துன்பமும் ஒன்றுதான் என இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் சான்றோரைத் துன்பம் என்ன செய்யும்?” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

பதகர் - கீழோர். அஞர் - துன்பம். நோய் - துன்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-18, 9:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே