பிறந்தநாள் வாழ்த்து

எத்தனையோ பெருமைகளை
அணிகலமாய்த் தாங்கி வாழ்ந்துவருபவனே
அவற்றால் கர்வம் ஏதுமிலாது ,
வாழ்ந்தால் உன்னைப்போல் வாழ்ந்திட-
வேண்டுமென்று உன்னை நினைத்து
நித்தம் நித்தம் பெருமைப் படுபவன்
உன் நண்பன் நான்; இன்றுனக்கு
பிறந்தநாள் ,எப்படி வாழ்த்துவது
என்னென்று வாழ்த்துவது என்று
தெரியாது நிற்கின்றேன்
நீ நீடூழி வாழவேண்டும் எல்லா
நலன்களோடு நோய் நொடி இல்லாமல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-May-18, 7:31 am)
பார்வை : 142

மேலே