எழுந்து வா இளைஞனே

எழுந்து வா இளைஞனே!
@@@@@@@@@@@@@

டீ கடை பெஞ்சில் அமர்ந்து
தினசரி செய்தித்தாளை
திருப்பி திருப்பி படித்தது போதும்
எழுந்துவா இளைஞனே!

குட்டி சுவர் மீது அமர்ந்து
வெட்டி பேச்சி பேசியபடி
பீடி சிகரெட் குடித்தது போதும்
எழுந்து வா இளைஞனே !

பகலெல்லாம் மாதுவின் பின்னால் திரிந்து
இரவெல்லாம் மது அருந்தி
அற்பமான ஆசையில் மயங்கியது போதும்
எழுந்து வா இளைஞனே!

போதை பொருளுக்கு அடிமையாகி
பொல்லாத நோய்க்கு இரையாகி
பொன்னான வாழ்க்கையை இழந்தது போதும்
எழுந்து வா இளைஞனே!

உன்னை நம்பி உன் வீடு மட்டுமல்ல
இந்த நாடும் உள்ளது
நீ மனம் திருந்தி வருவதே
நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது...

விடிகின்ற ஒவ்வொரு விடியலும்
உனக்காகவே விடிகின்றது
துடிக்கின்ற ஒவ்வொரு நொடியும்
உனக்காகவே துடிக்கின்றது...

படிக்கின்றக் காலத்தில்
நன்றாகப் படிக்காமல் போனால்
தேடுகின்றக் காலத்தில்
நல்ல வேலைக்கிடைத்திடுமா?

உதிரத்தை உணவாக்கிய தாயையும்
வேர்வையை பணமாக்கிய தந்தையையும்
நாளை பேணிக்காத்திட வேண்டாமா
எழுந்து வா இளைஞனே!

அண்ணா! அண்ணா ! என்று
வாய்நிறைய அழைக்கும் தங்கைக்கு
நல்ல வாழ்க்கை அமைத்து
கொடுத்திட வேண்டாமா?

உன்னையே நம்பி
பின்னால் வரும் மனைவியையும்
உன்னாலே உருவெடுத்து வரும்
உன் பிள்ளைகளையும்
சந்தோஷமாக
வாழ வைக்க வேண்டாமா?
எழுந்து வா இளைஞனே...!

படைப்பு

கவிதை ரசிகன் குமரேசன்

வாட்ஸ்அப் நெம்பர் 8883661977

எழுதியவர் : கவிதை ரசிகன் (21-May-18, 11:14 am)
பார்வை : 130

மேலே