தளை அறுபட தலை தெளிபட...........
உறக்கம் பிடிக்காத
உன்மத்த இரவுகளுக்கு
மனம் கட்டி வைத்த
மந்திரத் தளையின்
முடிச்சுகள் திடுமென
அறுந்து கனவுகள்
கண் குத்தி
எந்தன் பாலைப்
பயணமதநூடே
சிலிர்த்தெழும் ஒரு
சின்னப் பூவாய்
சில்லிடுகிறது மனமெனும் பேயின் மோகினி
வடிவம்.....
கனவோ கற்பனையோ
யாமறியேன் பராபரமே.......