சுதந்திரத்தின் கோலமிது

​நாகரீகத்தின் பரிணாமங்கள்
அநாகரீக அரங்கேற்றங்கள் !
நவீனயுகத்தின் முழக்கங்கள்
நலிவுற்றோரின் கதறல்கள் !
சீர்குலைக்கும் திட்டங்கள்
நிலைகுலையும் மக்கள் !

ஆன்மீகத்தின் அலறல்கள்
சிந்தனைகளின் சீரழிவுகள் !
பகுத்தறிவின் தடைகற்கள்
பலனற்ற வழிமுறைகள் !
மதங்களின் கோட்பாடுகள்
நியாயமிலா நிலைப்பாடுகள் !

உண்மைகளை மறைக்கும்
பொய்யான முகமூடிகள் !
அகத்தூய்மை அறவேயற்ற
ஆதிக்கசக்தியின் வேடங்கள் !
சுயநலத்தின் காலமிது
சுதந்திரத்தின் கோலமிது !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (21-May-18, 10:21 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 38

மேலே