சாவித்திரியாக நடித்திருக்கும்

அறுபதுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து பெரிய நட்சத்திரங்களுடனும் பெரிய படங்களிலும் நடித்தவர் நடிகையர் திலகம் சாவித்திரி. நடிகையர் திலகம் என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக வெளிவந்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியையடுத்து, ஜெயலலிதா, இந்திராகாந்தி ஆகியோரையும் வைத்து வாழ்க்கை சித்திரம் பண்ணப் போகிறார்களாம். நடிகையர் திலகத்தில் சாவித்திரியாக நடித்து வெற்றிபெற்றிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இதுபற்றி கீர்த்தி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

“சோகம், அழுகை, சிரிப்பு, கோபம்னு அவங்களோட எல்லா ரியாக்ஷன் காட்சிகளும் அதுல இருந்தன. சாவித்திரியைப் பற்றி ஒரு புத்தகம் கொடுத்தார். சாவித்திரி மேடத்தின் பொண்ணு விஜய சாமுண்டீஸ்வரிகிட்ட நிறைய பேசினேன்.

மேடத்துக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள் மேட்ச் ஆனது அப்போதான் எனக்குத் தெரிஞ்சது. குழந்தைங்களைப் பயமுறுத்த கண் இமையை மடக்கிக் காட்டுவாங்களாம். நானும் அப்படிப் பண்ணியிருக்கேன். கிரிக்கெட், நீச்சல், கார் ரேஸிங்னு சாவித்திரிக்குப் பிடிச்ச எல்லாம் எனக்கும் பிடிக்கும். தவிர, அவங்களைப் பற்றி எங்கம்மா சில விஷயங்களைச் சொன்னாங்க. நடிகர் ராதாரவி, சத்யராஜ் சில விஷயங்களைச் சொன்னாங்க. விமானப் பயணத்தில் நடிகை ஜெயபாரதி சில தகவல்கள் சொன்னாங்க. இப்படித்தான் தயாரானேன்.”

“ஒரு நடிகையோட பயோபிக் படத்துல நடிச்சது மூலமா, ஒரு நடிகையா நீங்க கத்துக்கிட்ட விஷயம் என்னென்ன?”

“சமயத்துல ‘நம்ம வாழ்க்கையும் இவ்ளோதான்ல!’னு தோணியிருக்கு. ‘இதுக்கா இவ்ளோ கஷ்டப்படுறோம்’னு நினைச்சிருக்கேன்.

கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கைக்கான பாடத்தை இந்தப் படம் மூலமா கத்துக்கிட்டேன். ஒரு நடிகையா, ‘கொஞ்சம் உஷாராவும் இருக்கணும்’னு என்னை எச்சரிச்சது அவங்களோட வாழ்க்கை!” “படத்தோட கெமராமேன் டேனி சஞ்செஸ்தான், எனக்காக ரொம்பக் கஷ்டப்பட்டார். குண்டான முகத்தைக் கொண்டுவர்றதுக்காக பிராஸ்தெடிக் பண்ணோம். அந்த மேக்கப் போட நாலு மணி நேரம் ஆகும்; மூணு மணி நேரத்தில கலைஞ்சிடும். என்னைக் குண்டா காட்டுறதுக்கு ஒரு லைட்டிங்; நார்மலா காட்டுறதுக்கு ஒரு லைட்டிங்னு ரொம்ப சிரமப்பட்டார் டேனி. டான்ஸுக்கு மட்டும் நிறைய ரிகர்சல் பண்ண வேண்டியிருந்தது.

நடிக்கும் போது சாவித்திரி மேடம் கை எங்கே வெச்சிருங்தாங்க, கண் அசைவுகள் எப்படி இருந்தன, உடம்பு எப்படி இருந்ததுனு யோசிச்சுப் பார்த்துப் பண்றதே சிரமமா இருக்கும். ஆனா டப்பிங் முடிஞ்சு படத்தைப் பார்க்கும் போது அழுதுட்டேன்”

“இந்தப் படத்துக்காக கிட்டத்தட்ட 120 காஸ்ட்யூம்ஸ் பயன்படுத்துனீங்களாமே?”

“ஆமாம். எல்லா காஸ்ட்யூம்களையும் டிசைன் பண்ணவர் கௌரங்க். எல்லாமே இந்தப் படத்துக்காக நெய்தவை. தவிர, தயாரிப்பாளரின் அம்மா பயன்படுத்தின ஐம்பதுவருட பழமையான சேலைகளையெல்லாம் யூஸ்பண்ணோம்.

குழந்தை, டீன் ஏஜ், நாடகங்கள் நடிச்ச காலம், சினிமாவுக்கு என்ட்ரி, சினிமாவுல டாப் லெவசல்ல ருந்த சமயம், கொஞ்சம் குண்டானது, ரொம்ப குண்டானது, இறந்துபோறதுக்கு முன்னாடி ரொம்ப ஒல்லியா மாறினது... இப்படி சாவித்திரியோட எல்லாக் காலங்களையும் நேர்த்தியாக் கொண்டு வர்றதுக்கு காஸ்ட்யூம்ஸ் ரொம்ப உதவியா இருந்துச்சு.”



கீர்த்தி சுரேஷ்!

எழுதியவர் : (23-May-18, 3:19 pm)
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே