பெண்ணாசை-----

தாய்மையையும் உயரிய குணமுள்ள இளைஞனையும் அடையாளம் காட்டும் மகாபாரதத்தின் முதல் அத்தியாயம்.

மதிக்கெட்ட மனதிற்கு கடிவாளம் இடாவிடில் அது அடிப்பட்டு மிதிப்பட்டு விதிவயப்படும். :D

கங்கை தேவவிரதனை மகனென்று சந்தனுவிடம் ஒப்படைதப்பின் மீனவச்சி சத்யவதியை காதலித்த சந்தனுவின் மூடத்தனத்தை/காதலை அடிப்படையாக கொண்ட கதை. பாலகுமாரன் என்ற பெயர் கண்டவுடன் பழைய நாழிதழ் கடையில் வாங்கியது :')

சத்யவதி - வாழ்வில் இல்லாமையும் இயலாமையையும் சந்தித்த மீனவ வம்சத்து பெண். அழகில் இன்றளவும் இவளுக்கு நிகர் இவள் மட்டுமே. தனக்கென்று, தன்னை சேர்ந்த மீனவ மனிதர்க்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்க அஸ்தினாபுரத்தின் அரசியல் நியமங்களை நிலைகுலைய செய்தவள்.

கங்கேயனுக்கு எதிராய் செயல்படுவது சத்யவதியின் நோக்கமல்ல. பின்தங்கிய தன் குலம் தழைத்தோங்க வேண்டுமென்பதே அவளது நோக்கம். அறிவும் அரசியல் சூழ்ச்சிகளும் ஒருங்கே ஒன்று சேர்ந்தது அவள் வடிவில்.

பாலகுமாரனின் எழுத்துக்களில் சத்யவதி அழகும் அறிவும் எதார்த்தமும் நிரந்த பெண்ணாய் படைக்கப்பட்டிருகிறாள். பீஷ்மனோ நிதானமும், தீர்க்கமான சிந்தனையும் கொண்டு தூய்மையில் கங்கையை பிரதிபலிக்கின்றார்.

பெண்ணாசை, மண்ணாசை - இவை இரண்டால் பின்னப்பட்ட மகாபாரதத்தின் முதல் அத்தியாயம் மட்டுமே பாலகுமாரனின் பெண்ணாசை. :)
-----------------
மகாபாரத முன்கதையே இந்த பெண்ணாசை.....!

"பெண்ணுக்கு மயங்கி சரிவது என்பது சிலருக்குப் பிறக்கும்போதே ஏற்படும் பலவீனம்" என்று அஸ்தினாபுர அரசன் சந்தனு அறிமுகம்,

"என் அழகால், கடவுள் கொடுத்த இந்த வரத்தால் என்னால் முடிந்த வரை என் குலத்தை மேன்மைப்படுத்துவேன்" என்று மீனின் மகள் சத்தியவதி அறிமுகம்,

"என் தகப்பன் விரும்பிய பெண் என் தாய். என் தாயை என் தகப்பனிடம் சேர்ப்பதே என் கடமை" என்று கங்கைக்கும் சந்தனுக்கும் பிறந்த பீஷ்மன், சத்தியவதியின் வாக்குக்கினங்க பிரம்மச்சரியம் பூண்டு, சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் மணமுடித்து அஸ்தினாபுர அரியவையில் அமர்த்துகிறான்.

ஓர் மாகாபாரதம் துவங்கியது.....!

எழுதியவர் : (23-May-18, 3:55 pm)
பார்வை : 16

மேலே