பைத்தியமே

நட்பு நட்பாயில்லையோ
என்னவோ ஆதலால்
நட்பால் நண்பர்களும்
நண்பர்களா யில்லை

காதல் காதலாயில்லையோ
என்னவோ ஆதலால்
காதலியும் நல்லதொரு
காதலியா யில்லை

மறதி மறதியாயில்லையோ
என்னவோ ஆதலால்
நினைவால் அவளை ஒருபோதும்
நினையாமலிருப்பதில்லை

கிடைக்க க்கூடாதது அதனால்
கிடைக்க வில்லை அதற்காய்
தணல் பட்டப் புழுப்போல துடி
துடிப்பதில் அர்த்தம் உண்டோ

சாவும் சாவாக இருந்திடுமோ
செத்தப் பின்பு தெரிந்திடுமோ
நல்லவர் யார் தீயவர் யார் என்று
தெரிந்த பின் போன உயிர் மறு
படியும் உயிர்த்திட சாத்தியமோ

இது என்ன வாத்தியமோ
இல்லை முற்றிய பைத்தியமோ
இப்படியு மொரு வைத்தியமோ
என்ன வையகமோ பொய்யகமோ

சிலர் வாழ்வுக்கு பயந்து உயிரை
விட்டு கொள்பவர்க்கு கொடுத்தான்
உயிரை அதுதான் எதற்கு தெரியாது

சிலர் உயிருக்கு பயந்து வாழ்வை
தொலைத்தவர்க்கு கொடுத்தான்
வாழ்வை அதுதான் எதற்கு தெரியாது

பயணத்தின் குறுக்கே நதிநீர்
நீரெல்லாம் ஓடி முடிக்கட்டும்
அதன் பிறகு நதியை கடப்பேன்
இது சாத்தியமா பைத்தியமே

°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை மகாராஷ்டிரா

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (23-May-18, 7:50 pm)
பார்வை : 88

மேலே