அதிக அன்பும் ஆபத்து தான் போல

எங்கோ நீ இருக்க
எங்கோ நான் இருக்க
இருவருக்கும் இடையில்
அண்ணன் தங்கை
உறவை உருவாக்கினால்
உன் காதலி என் தோழி ....

உன்னைப் பார்க்காமல் பல நாட்கள்
உன்னுடன் பேசாமல் பல நாட்கள்
ஆனால் அன்பு மட்டும் ஏனோ
அனுதினமும் சந்தித்து செல்கிறது .....

செல்லமான கோபங்கள் சில
பேசமாட்டேன் என நான் பேசிக்கொண்டிருப்பதை
புன்னகையோடு கேட்டுக்கொண்டிருப்பாய் .....

ஆனால் நம்
பந்தத்தில் பொறாமைக்கொண்ட
இந்த காலம் இடையில்
நம் உறவிற்கு
இடைவேளை விட்டது ....
மீண்டும் பார்க்காமல் பல நாட்கள்
பேசாமல் பல நாட்கள் ....

இன்று நீ என்னை அழைக்கிறாய்
ஆனால் உன்னைக் காண
என் மனம் ஏனோ தயங்குகிறது ....

அதிக அன்பும் ஆபத்து தான் போல ...
உறவைக் கொடுத்த உன் காதலியே
நீ என்னை இன்று சந்திக்கக் கூடாது என பல பொய்கள் உன்னிடம்
பொய்கள் அனைத்தும் உண்மையாக என்னையும் உன்னிடம் சொல்லவைக்கிறாள் ....

இன்று நானோ பாசம் இல்லாதவள்
அன்பை மறந்துவிட்டவள்
காலம் தந்த இடைவேளையில்
உன்னையும் மறந்து போனவள் ....

பொய்கள் எல்லாம் மெய்கள் உன் காதலியால்
மெய்கள் எல்லாம் பொய்கள் என்னால் ....
உறவிற்கு வித்திட்டவளே
இன்று அழிக்க நினைப்பது ஏனோ ?

என்று உன் கரங்கள்
என்னை மீண்டும் அனைத்துக்கொள்ளும் ?
என் தலை மீது எப்போது
நீ செல்லமாய் தட்டிக் கொடுப்பாய் ?
சொல்லாத இந்த ஆசைகள் உன்னிடம்
சொல்லாமலே கரைந்து விடுமோ ?

எழுதியவர் : Deepikasukkiriappan (24-May-18, 9:45 am)
பார்வை : 712

மேலே