மழையே வா

பள்ளி சென்ற பிள்ளை
வீடு வரவில்லை
மழையே பொறுத்திரு ..
தாயின் வேண்டுதல்

வேலைக்குச் சென்ற கணவன்
வீடு திரும்பவில்லை
மழையே பொறுத்திரு ..
மனைவியின் வேண்டுதல்

ஒதுங்குவதற்கு இடமில்லை சாலையில்
மழையே பொறுத்திரு ..
வாகனவோட்டியின் வேண்டுதல்

புத்தாடை வீணாகிவிடும்
மழையே பொறுத்திரு ..
குழந்தையின் வேண்டுதல்

பிள்ளையின் திருமணம்
நன்றாய் நடக்க வேண்டும்
மழையே பொறுத்திரு ..
பெற்றோரின் வேண்டுதல்

எல்லாருடைய வேண்டுதலும் சரியே

இப்படியே ஒவ்வொருவருக்காகவும்
மழை பொறுத்திருந்தால்
விவசாயியின் நிலை என்னவாகும்
விவசாயம் என்னவாகும்
உணவுக்கு என்ன வழி

நனைவதற்கு வருத்தப்பட்டு
மழையைப் பொறுக்கச் சொல்கிறோம்
தன் கண் முன்னால் விளை நிலம்
காய்வதைக் கண்டு
விவசாயி தூக்கிடுகிறான்

ஒருநாள் நனைந்தால் என்ன
பூமித்தாய் குளிரட்டும்
விளைச்சல் செழிக்கட்டும்

எல்லோருடைய வேண்டுதலும்
ஒருமித்ததாய் இருக்கட்டும்
மழையே வா
சீக்கிரம் வா
பூமி குளிர வா
விவசாயம் செழிக்க வா
மழையே வா வா வா ....

எழுதியவர் : கீர்த்தி (24-May-18, 10:27 am)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : mazhaiyae vaa
பார்வை : 104

மேலே