அரசியல் கூத்து-ஸ்டெர்லைட்

மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இங்குண்டு -தமிழா
வாழ்க்கை இங்குண்டு!
மக்கள் வாட அரசு ஆடும்
ஆட்சி இங்குண்டு -தமிழா
ஆட்சி இங்குண்டு!
நீதி கேட்டால் நெஞ்சில் சுடும்
நேர்மை இங்குண்டு -தமிழா
நேர்மை இங்குண்டு!
வெள்ளை வேட்டிக்குள்ளிருந்து
கொள்ளைக் கூட்டம் ஆட்சி செய்யும்
அல்லல் இங்குண்டு -தமிழா
அல்லல் இங்குண்டு!
கஷ்டம் போக இஷ்டம் போல
வாழ்வு இனியுண்டோ ?-தமிழா
வாழ்வு இனியுண்டோ ?
நோட்டு வாங்கா ஓட்டுப் போடும்
நாளும் இங்குண்டோ ?தமிழா
நாளும் இங்குண்டோ?
அந்த நாளில் தமிழ் அகத்தில்
விடியல் ஒன்றுண்டு- தமிழா
விடியல் ஒன்றுண்டு!

எழுதியவர் : (24-May-18, 1:40 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 57

மேலே