442 உலக அழிவும் உய்வுக்கே வரும் – துன்பம் 8

கலித்துறை

பலருய் வான்சிலர்ப் படுத்திடும் பதியெனப் பரன்பார்ச்
சலனம் தீவரை யிடிபெருங் கான்முதல் தாபம்
கலவு றச்செயுங் காரணம் யாதெனிற் கணக்கில்
உலக கோடிசம் பந்தத்தா லெனவுண ருளமே. 8

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சே! பலர் துன்பமின்றி இன்புடன் வாழ, நாளும் இடையூறாக உள்ள சிலரை ஆளும் மன்னன் கொல்வது போல, ஆண்டவன் உலகில் நிலநடுக்கம், எரிமலை, இடி, சூறைக் காற்று முதலிய துன்பங் களைக் கலந்து செய்வதற்குக் காரணம் கணக்கில் லாத பலகோடி உலகத் தொடர்பால் உலகழியும் துன்பத்தையும் உண்டாக்குவான் என்பதை உணர்ந்து கொள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

படுத்திடும் - கொல்லும். சலனம் - நடுக்கம்.
கால் - காற்று. தாபம் - துன்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-18, 3:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே