443 பத்தரை ஆளவே பரன் துன்பருள்வன் – துன்பம் 9

கலித்துறை

பத்த ரன்பினைச் சோதனை பண்ணவும் பார்மேல்
வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்விற்
சித்த மெய்தவும் அன்னரைத் துயர்செயுந் தெய்வம்
அத்தன் சேயரை யடித்தறி வுறுத்தல்போ லம்மா. 9

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பெற்றோர் பிள்ளைகளை அடித்து அறிவுறுத்தல் போல, பக்தர்களின் அன்பைச் சோதனை செய்யவும், உலக வாழ்க்கையில் வைத்த அவாவினை அறுக்கவும், பேரின்பப் பெரு வாழ்விற்கு உள்ளத்தைத் தயார்ப்படுத்தவும் கடவுளும் மக்களுக்குத் துன்பத்தை தரும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பத்தர் – பேரன்பர், வாஞ்சை - அவா.
துயர் - இடையறாத் துன்பம். அத்தன் - தந்தை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-18, 3:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே