நெஞ்சு பொறுக்குதில்லையே

போராட்டம் பொதுமக்கள்
செய்வது நியதி நியாயம்

அதற்கு தீராத வேட்கையுடன்
ஆடுவது இராணுவம் சதுராட்டம்

போனால் போகுது இருப்பவன்
பிழைக்கட்டுமே நிவாரணம் அரசு

என்னதிது என்னதிது ஏனிந்த
அடங்காமை ஆற்றாமை

இது நடைமுறையில் கொண்டுவந்த
மாற்றங்களா

எப்போது தீரும் இந்தத்
தணியாத தாகங்கள்

மாற்றம் ஒன்றே மாறாதது
எப்போது அந்த மாற்றம்

மறுபடியும் மறுபடியும் முளைக்கும்
இந்த விஷச் செடிகள்

நாகரீகம் வளர்ந்த இந்நாட்டில்
நாம் காண்பது அநாகரீகம்

உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இனம் மதம் மொழி வேற்றுமை

கடலில் கடலலை ஓய்ந்தாலும்
நெஞ்சில் அடங்காது இந்த வஞ்சங்கள்

கொஞ்சமும் வஞ்சனை குறையுதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே

எழுதியவர் : பாத்திமாமலர் (25-May-18, 11:01 am)
பார்வை : 131

மேலே