445 தந்தவன் கொண்டானென்று தாளிணை தொழுவர் நல்லோர் – துன்பம் 11

கலித்துறை

மனைவி சேய்தமர் தம்முன மாளினு மகியிற்
புனையுஞ் சீரெலாம் ஒழியினுந் துன்பமென் புகினும்
அனைய சீரெலா மளித்தவன் கொண்டன னென்ன
வினைய மோடினி யவனடி பரசுவர் மேலோர். 11

– துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அன்புடைய மனைவி, பிள்ளைகள், உறவினர் தமக்கு முன் இறந்தாலும், உலகில் சிறப்புற அழகு செய்த செல்வமெல்லாம் நீங்கினாலும், வறுமை யால் துன்புற்று வாடி எலும்பு சிந்தினாலும், அத்தகைய செல்வமெல்லாம் அருளுடன் அளித்த இறைவன் எடுத்துக் கொண்டான் என்று பணிவுடன் எண்ணி அவன் திருவடியை நன்னெறிச் செல்லும் நல்லோர் அன்புடன் தொழுவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

மகி - உலகம். உகினும் - சிந்தினாலும்.
வினையம் - பணிவு. பரசுவர் - தொழுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-18, 3:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே