வாழ்க்கை

வீழ்ந்து எழுவதல்ல வாழ்க்கை
வீழ்ந்ததும் எழுவதே வாழ்க்கை..!

வீழ்ந்தாலும் அருவியாக விழு - உன்னால்
குளிரடையட்டும்....
எழுந்தாலும் விருட்சமாய் எழு - உன்னில்
இளைப்பாறட்டும்....

வாழும் வரை போராட்டமல்ல - இங்கு
வாழ்வதே போராட்டம் தான்....
களத்தில் இறங்கி போராடுபவர்களைக் காட்டிலும் - இங்கு
கருத்து சொல்லி காலம் கடத்துவோரே அதிகம்.......

கரம்தனைக் கொண்டு
சிரம்தனை உயர்த்தி
முட்டி மோதிடு......
சிகரம் தொடவதில் சிரமமிருக்காது...

துளியேனும் அஞ்சிடாமல்
உளி கொண்டுனை செதுக்கிடு...
உலகம் உன்னை வணங்கும் படியாக...

கவிஞர். ஆபா

எழுதியவர் : கவிஞர் ஆபா (29-May-18, 11:23 am)
சேர்த்தது : கவிஞர் ஆபா
Tanglish : vaazhkkai
பார்வை : 272

மேலே