பொறந்தவீடு

ஒற்றைக் கருவறையில் உருவானோம்
பிறப்பில் வருடத்தால் வேறுபட்டோம்
இனத்தால் வேறுபட்டோம்
இதயத்தில் நேசம் மாறவில்லை

எப்போதும் சண்டை
எதுக்கொடுத்தாலும் கோபம்
வன்முறைகளின் உச்சமாக
உடன் பிறப்புக்கள் நாம் சண்டையிட்டோம்

காலம் மாறியது
வயது கூடியது
வன்முறைகளில் மாறாமல்
வழக்கத்தில் இருந்தது

அறியாத வயதில்
தொலைவில் ஒருநாள் சென்றேன்
நாட்கள் கழிந்த பிறகு வீடு திரும்பினேன்
புதிதாய் ஒரு கூட்டம்
புது நபர்களின் கேளி கொண்டாட்டம்

முகவரி அறியாத ஒருவரை கண்டு
முழுவதும் வெட்கப்பட்டு நின்றாய்
சரலமான பேச்சில்
சலனங்கள் இருப்பதை உணர்ந்தேன்

தனிமையில் அழைத்தேன்
என்னவென்றேன் -- எதையும்
நான் அறியேன் என்றாய்!
அன்னையை அழைத்தேன்
நடப்பது என்னவென்றேன்...

உடன் பிறந்தவள்
உன்னை பிரியும் நேரம் வந்தது
என்றாள் --- எதுவும் புரியவில்லை!
புரிந்துகொள்ளும் வயதும்
அப்போதில்லை!!
விடலை பருவத்தில்
விருப்பம் போல் கிடக்க முற்பட்டேன்...


ஏதோ ஒரு தேதியினை நோக்கி
எல்லோரும் சென்றார்கள்
எதையோ ஒன்றை எதிர்ப்பார்த்து
எல்லோரும் காத்திருந்தார்கள்
என்னவென்று தெரியாமல்
என்னையும் இணைத்து கொண்டேன்

புத்தாடைகள் வந்தது
பூமியில் நிற்காமல் குத்தாட்டம் போட்டேன்
அன்றும் புரியவில்லை!
உடன் பிறந்தவளை
உடனடியாக பிரிவேனென்று

மஞ்சல் நிற ஆடையுடுத்திய
குடம் ஒன்றினை
தோள்களில் சுமந்தேன் -- சூழ்நிலைகளை
அறிய முடியாமல்
சுற்றங்களுடன் சுற்றி நின்றேன்!

ஊர்வலம் ஒன்று நடக்க இருந்தது
உறவினர்களின் அழைப்பும் இயுந்தது
உடன் பிறந்தேனென்று
உன்னை பிரியாமல்
நானும் வந்தேன்

மணமகன் என்று ஒருவர் வந்தார்
பல தினம் அவரை பார்த்ததில்லை
ஆனால்
பழகிய அனுபவம் போல்
பக்கத்தில் அமரவைத்தார்கள்-- பாவமாக
நீ அமர்ந்தாய்
பாவிமகன் நான் புரிந்துகொள்ளவில்லை!

இசை முழங்க
வான வேடிக்கை ஒளிகள் சூழ்ந்து
மாளிகை ஒன்றில்
மணமகனின்
மணமகள் என்று
உன்னை உறுதியாக அழைத்தார்கள்....

புகை படங்களுக்கு நேரம்ஒதுக்கப்பட்டது
புசிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது
புரியாதொரு பூரிப்பாய் --- பூவே உன்னை
புரிந்து கொள்ளாமல்
பிரிந்து சென்றேன்!!

காலை விடிந்தது
கடமைகள் தொடர்ந்தது
நிற்க நேரமின்றி எல்லோரும்
பதட்டமாக இருந்தார்கள் -- பாவி மகன்
அப்போதும் பார்க்கவில்லை
பார்வைகளில் வழிந்த கண்ணீரை....


எங்கோ நின்று கொண்டிருந்தேன்
எங்கே சென்றாய் என்று
அவசரமாக என்னை அழைத்து
அவளைப்பார் என்றார்கள் -- பருவம்
தெரியாமல் பார்த்து சிரித்தேன்!
புத்தாடை மகிழ்ச்சியில்
பூமியில் பூர்த்ததை மறந்தேன்!!

ஏதொ ஒரு கிராமத்தினை நோக்கி
பயணம் தொடர்ந்தது -- சிலமுறை
பார்த்துள்ளேன் என்று
சிந்தித்தவனுக்கு -- அங்கு
நீ எப்படி சிரிப்பாய் என்று
சிந்திக்க தெரியவில்லை!!

விருந்துகள் முடிந்தது
விடைபெற வேண்டிய நேரம் வந்தது
அப்போதும் உன் விழிகளில்
நீரோட்டம்!
விடைப்பெற்று வீடு வந்தேன்!!

அலைபேசிகளில் அன்னையிடம்
அடிக்கடி கண்ணீர் கசிந்தது
என்ன என்று நினைக்க தெரியாமல்
நிற்காமல் ஓடினேன்......


வருடங்கள் வளர்ந்து கொண்டே வந்தது
வாலிபம் வந்ததடைந்தேன்
வளர்ச்சியும் கண்டுகொண்டேன்
பக்குவம் வந்த பின்பு
பாவிமகன்
எத்தனை காரியம் செய்தேன் என்று
பரிதவித்து நின்றேன்.....


ஒற்றைக் கருவறையில் பிறந்த உன்னை
ஒதுக்கி வைத்து
பார்த்திருக்கிறேன்......

முகவரி தெரியாத ஒருவருக்கு
முழுவதுமாக உன்னை
விட்டுக் கொடுத்திருக்கிறேன்.....

புத்தாடை பார்த்து சிரித்து
பூவே உன் வாசத்தை
மறந்திருக்குறேன்....

மஞ்சல் பூசிய விழிகளுக்கு
கண்ணீர் பூசிக்க
கவலையை கொடுத்திருக்கிறேன்......

மனம் என்பது சொல்லாமலே
உன்னை மணமகளாக மாற்றியுள்ளேன்...

பிரிவாய் என்பது தெரியாமலே
பொதுவாய் விட்டு வந்திருக்கிறேன்.....

உடன் பிறந்த உன்னை
ஊர்பேர் தெரியாத ஒருவருக்கு
உறவாக கொடுத்திருக்கிறேன்......

காலங்களை நீ தெரிந்துகொள்ளவில்லை
என்பது தெரியாமலே
கண்மூடித் தனமாக
தனிமையில் விட்டு வந்திருக்கிறேன்....

வருடத்தில் முன்னால் பிறந்தவளே
வாழ்க்கையிலும் நீ தான் முன்னோடியா?
வீசும் காற்றோடு
காலங்களில் விவரங்களை
கற்றுக் கொண்டாயா??????????

அனுதினம் பார்க்கும்
சமுதாயத்தில்
அங்கம் வகிக்க கற்றுக் கொண்டாயா??

மணம் முடித்த கனவனுடன்
காலத்தை கடக்க
கற்றுக் கொண்டாயா???

நெடுந்தூரம் செல்லும்
நெடுஞ்சாலையும்
நேராக செல்லாது என்பதை
நீ கற்றுக் கொண்டாயா?????????


ஆயிரம் சுதந்திரம்
புகுந்தவீடு கொடுத்தாலும்
பொறந்தவீடு என்னால்
உன்னை விட்டுக் கொடுக்க முடியுமா???
..........................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (29-May-18, 9:01 pm)
பார்வை : 412

மேலே